
🔊To listen to this news in Tamil, Please select the text.
‘10-ஏ’ பெற்ற எஸ்பிஎம் மாணவர்கள், தங்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் ஆகஸ்ட் மாத கடைசிவரை காத்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், ஜூலை 10-இல் நாடாளுமன்ற சிறப்பு அவை நடவடிக்கையின்போது குறிப்பிட்டது, மலாய் அல்லாத சமூகத்தினரைப் பொறுத்தவரை ஏற்புடைய-தும் அல்ல; பொருத்தமானதும் அல்ல என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தகவல் பிரிவுத் தலைவர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
நலிந்த பூமிபுத்ரா குடும்ப மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மெட்ரிகுலேஷன் கல்வி என்பதை கல்வி அமைச்சர் தவறாக புரிந்து கொண்டுள்ளார். ஹிண்ட்ராஃப் போராட்டக் காலத்திலேயே, இந்திய சமுதாயத்தில் உள்ள ஏழைக் குடும்ப மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் பொன்.வேதமூர்த்தி எழுப்பிய முழக்கத்தை, பிரதமர் நஜீப் ஓரளவுக்கு நிறைவேற்றினார்.
10-ஏ பெற்ற இந்திய மாணவர்கள் பெரும்பாலும் உயர் வருமான குடும்பங்-களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்-களில்தான் உயர்க்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமேத் தவிர, ஏற்கெனவே பற்றாக்குறை சிக்கலுக்கு ஆளாகி உள்ள மெட்ரிகுலேஷன் பக்கம் அவர்களைத் திருப்ப முனைவது பொருத்தமல்ல; தவிர, மெட்ரி-குலேஷன் கல்வி என்பது, படிப்பில் பின் தங்கியவர்களுக்கும் ஏழைக் குடும்ப மாணவர்களுக்கும் ஆனது.

10-ஏ பெற்ற மலாய் அல்லாத மாணவர்கள் அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் ஏற்கெனவே செய்த அறிவிப்பு, வெறும் வார்த்தை ஜாலமாகவேப் பார்க்கப்பட்டது, கல்வியில் அரசியலைக் கலப்பதும் அதை இன-மத பார்வைக்குள் உட்படுத்துவம் தவிர்க்கப்பட்டு, அதை சுதந்திரமான எல்லையில் அனுமதிக்க வேண்டும்.
‘ரிஃபாமாசி’ குறித்து பெரிதாக பேசிவந்த பக்கத்தான் அரசாங்கத்திலாவது கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என்று மலேசியர்கள் நம்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அரசும் கடந்த அரசுகளின் தவறுகளைத் தொடர்வதுடன் பாகுபாடுட்டையும் கடைப்பிடிக்கிறது. மடானி அரசில் உள்ள தைரியமான தலைவர்கள்கூட, தங்கள் நிலையை தற்கத்துக்கொண்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் என்று மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ச.காத்திகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
