30.2 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

மலேசிய தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை பறக்க விடுவோம்: குணராஜ் வலியுறுத்து

🔥 Views : 8
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தி உள்ளார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திர தினத்தையும் செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினத்தையும் நாம் கொண்டாடவுள்ளோம்.

இவ்விரு கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் பரவலாக தேசியக் கொடியை பறக்க விடுங்கள்.

இதன் மூலம் தேசப் பற்றை காட்டுங்கள் என அரசாங்கம் வலியுறுத்துகிறது.

இதன் அடிப்படையில் செந்தோசா மக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.

மக்களைத் தவிர்த்து வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகளுக்கும் இக் கொடிகள் வழங்கப்பட்டது.

இதன் மூலம் அனைவரும் தேசியக் கொடியை பரவலாக பறக்க விடுவார்கள் என தாம் நம்புவதாக குணராஜ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles