30.2 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

சுக்மா கபடிப் போட்டியில் சிலாங்கூர் மாநிலம் 2 தங்கப்பதக்கங்களை வெல்லும்

🔥 Views : 8
👁 Reading Now : 58

🔊To listen to this news in Tamil, Please select the text.

சுக்மா கபடிப் போட்டியில் சிலாங்கூர் மாநிலம் 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதிக்கும்.

சிலாங்கூர் மாநில கபடி சங்க தலைவர் அசோகன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான சுக்மா விளையாட்டு போட்டி சரவா மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்த சுக்மா போட்டியில் கபடி பதக்கப் போட்டியாக இடம் பெற்றுள்ளது.

அனைத்து மாநிலங்களில் இருந்தும் போட்டியாளர்கள் இக்கபடிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து ஆண், பெண் அணிகளுடன் பயிற்றுநர்கள் நிர்வாகிகள் இன்று காலை சரவா மாநிலத்திற்கு சென்றனர்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அவர்களை வழியனுப்பி வைத்து சிறப்பித்தார்.

இம்முறை சுக்மா கபடிப் போட்டியில் இரு தங்கப்பதக்கங்களை வெல்லும் இலக்குடன் சிலாங்கூர் அணியினர் சரவாக்கிற்கு சென்றுள்ளனர்.

இதற்காக கிட்டத்தட்ட 1 மாதக் காலம் அவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் அவர்கள் நிச்சயம் இப்போட்டியில் சாதிப்பார்கள் என்று அசோகன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles