
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய எப்.ஏ கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது
ஜொகூர் அணியுடன் சிலாங்கூர் அணி மோதவுள்ளது.
இந்நிலையில், ஜொகூர் கால்பந்து அணிக்கு ஆதரவு வழங்கும் விதமாக அனைத்து ரசிகர்களும் புக்கிட் ஜாலில் தேசிய அரங்குக்கு வருகை தாருங்கள் என்று மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் அழைப்பு விடுத்தார்.
நடப்பு எப்.ஏ கிண்ண வெற்றியாளரான ஜொகூர் அணி, சிலாங்கூருடன் மோதுகிறது.
இதனை முன்னிட்டு அனைத்து ஜொகூர் ரசிகர்களுக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் ஜொகூர் அணி 2016, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் எப்.ஏ கிண்ணத்தை வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



