
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஆப்பிரிக்க நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுபாங் ஜெயா பிஜேஎஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைம் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்தது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை குழுவால் அந்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த நபர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
அவர் பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, சுபாங் ஜெயா போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத், பண்டார் சன்வேயில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.



