26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

அறிக்கைகள் வெளியிடும் போது கவனமுடன் செயல்பட வேண்டும்: அஸ்மி ஹசான் & மஸ்லான் அலி கூட்டாக அறிக்கை 

🔥 Views : 7
👁 Reading Now : 44

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரதமர் அன்வாரின் அரசியல் செயலாளரான ஷம்சுல் இஸ்கண்டார் அகின் அறிக்கைகளை வெளியிடும் போது கவனமுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று இரு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து பதிவிட்டுள்ளானர் 

ஷம்சுல் இஸ்கண்டாரின் கருத்தானது நடப்பில் உள்ள தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இரு அரசியல் கூட்டணிகளிடையே பெரும் குழப்பத்தையும் அரசியல் ஒத்துழைப்பு இல்லாத சூழலை உருவாக்கும் என்று அவர் சொன்னார். 

ஷம்சுல் இஸ்கண்டார் வெளியிட்ட கருத்து என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்தாகும். அதனால் ஒட்டுமொத்த ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணி கட்சிகளைப் பிரதிநிதிக்கவில்லை என்று அவர் அஸ்மி கூறினார். 

முன்னதாக, பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று ஷம்சுல் இஸ்கண்டார் கடந்த திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது 

இந்நிலையில் ஷம்சுல் இஸ்கண்டாரின் கருத்தை இரு அம்னோ தலைவர்களான அஸாலினா, மற்றும் அம்னோ மகளிர் உறுப்பினர் நுருல்ஹிடாயா இருவரும் கடும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles