
சுபாங் அக் 22
கிளாந்தான் மாநில தலைநகரான கோத்தா பாரு மற்றும் சிலாங்கூரின் சுபாங் இடையிலான உள்நாட்டு விமான சேவையை முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் தொடங்கியது.
நேற்று மாலை 5 மணியளவில் சுபாங் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தை வந்தடைந்த பாத்திக் ஏர் பயணிகளுக்கு அன்பளிப்பு கைகளை வழங்கி சிலாங்கூர் சுற்றுலாத்துறை தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருல் ஷா,பாத்திக் ஏர் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி பவானி வீரய்யா, பாத்திக் ஏர் அதிகாரி சுரேஸ் மற்றும் மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் அதிகாரிகள் உற்சாகமுடன் வரவேற்றனர்.
இதனிடையே சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் பாத்திக் ஏருக்கு ஒரு முக்கிய மையமாக விளங்கி வருவதாக பாத்திக் ஏர் விமான நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கை சேர்ந்த வர்த்தக மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் கோத்தா பாருவுக்கு பயணிக்க இந்த புதிய விமான சேவை பெரிதும் உதவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய விமான சேவைக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கிளாந்தான் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கிழக்குக்கரை மற்றும் நாட்டின் தலைநகரை எளிதில் இணைக்க இந்த புதிய விமான சேவை பெரிதும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் சுபாங்கிலிருந்து நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொள்ள தாங்கள் திட்டம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவையின் வழி சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான சேவைகளை அதிகரிக்க பாத்திக் ஏர் வியூகங்களை வகுத்து வருவதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.



