
லீ ஷீ ஜியா அணிந்திருந்த ஜெர்சியில் மலேசியக் கொடி தலைகீழாக இருந்த சம்பவத்தைத் தவிர்க்க புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.
ஜெர்சியில் மலேசியக் கொடி தலைகீழாக இருந்த சம்பவத்தைத் தவிர்க்க, விளையாட்டு வீரர்களின் ஆடைகளில் ஜாலூர் ஜெமிலாங்கைப் பயன்படுத்துவது தொடர்பான புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும்.
தற்போது எந்த ஒழுங்கு விதிகளும் அல்லது தொடர்புடைய குறியீடுகளும் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால் விரைவில் புதிய நெறிமுறை உருவாக்கப்படும்.
குறிப்பாக இது மீண்டும் நடக்காமல் இருக்க வேறு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க தேசிய விளையாட்டு ஆணையத்துடன் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
