26.4 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

மலேசியாவின் மிதவாத இஸ்லாமிய அணுகுமுறையால் சவூதி மன்னர் ஈர்க்கப்பட்டார்: நஜிப்

🔥 Views : 8
👁 Reading Now : 68

மதவெறி போதனைகளை நிராகரித்த மலேசியாவின் மிதவாத இஸ்லாமிய அணுகுமுறையால் சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா ஈர்க்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இதனை கூறினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பயணத்தின் போது மரணமடைந்த அவர்  தனது பாராட்டையும்  வெளிப்படுத்தினார்.

மேலும் மலேசியத் தூதுக் குழுவுடனான முதல் சந்திப்பின் போது சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஜீஸ் ஆர்டர் ஆஃப் மெரிட் பதக்கத்தை தனக்கு வழங்கியதையும் முன்னாள் நிதியமைச்சருமான அவர் பகிர்ந்து கொண்டார்.

பன்முக கலாச்சார சமூகத்தில் அமைதியைப் பேண மலேசியாவின் திறனைப் பற்றி மன்னர் அப்துல்லா புகழ்ந்ததை நஜிப் நினைவு கூர்ந்தார்.

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு மலேசியாவும் சவூதி அரேபியாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் விவாதித்ததாகவும் நஜிப் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles