
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முயற்சிகளை பல இந்தியர்கள் இப்போது பாராட்டுவதில்லை.
இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மஇகா பொருளாளர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
நஜிப் தனது முந்தைய ஆட்சி முழுவதும் இந்தியர்களின் நலனுக்காக ஆற்றிய சேவைகளை யாரும் மறந்துவிடக் கூடாது.
கச்சான் தோலை மறப்பது போல் செயல்படும் ஒரு சில தரப்பினரின் செயல்கள் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.
போஸ்கூ என்றழைக்கப்படும் நஜிப் இல்லாமல் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் தலைவிதி இன்னும் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன், நல்வாழ்வு, சிறப்பை உண்மையில் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒரே பிரதமர் என்று அவர் கூறினார்.
இந்திய சமுதாயத்தில் உருமாற்றத்திற்கான புளூபிரிண்ட் ஒன்றை டத்தோஶ்ரீ நஜிப் தலைமையின் உருவானது.
இதற்கு முன் எந்த பிரதமராலும் இந்த திட்ட வரைவு செய்யப்படவில்லை.
நஜிப் சம்பந்தப்பட்ட திட்ட வரவை செயல்படுத்தப்படுவதிலும் உறுதியாக இருந்தார்.
இந்திய மக்களின் எதிர்காலத்தைப் பற்றி வேறு எந்தத் தலைவரும் இப்படிச் சிந்திக்கவில்லை.
ஆனால் அந்த நேரத்தில் பூலான், பிந்தாங் என பல இனிமையான வாக்குறுதிகளால் பலர் ஈர்க்கப்பட்டு தற்போது ஏமாற்றத்தையும் அடைந்துள்ளனர்.
இதை தவிர்த்து இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்வி இடங்களை 1,500ல் இருந்து 2,500ஆக உயர்த்தினார்.
இதை தவிர்த்து புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு உரிமம், தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி, இந்திய சமுதாயத்திற்கான அமைச்சரவை குழு, செடிக் உட்பட பலவற்றை அமைத்து இந்திய சமுதாயத்திற்கு அவர் உதவினார்.
இந்திய சமுதாயத்திற்காக நஜிப் உருவாக்கிய பல திட்டங்களை தற்போதைய மடானி அரசும் தொடர்ந்து வருகிறது.
ஆக நஜிப்பை பற்றி அவதூறாக பேசாமல் அவர் ஆற்றிய சேவைகளை மக்கள் நினைவுக்கூர வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.
