26.4 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

தஞ்சோங்மாலிமில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

🔥 Views : 12
👁 Reading Now : 28

கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பேரா மாநில போலிஸ்படைத் தலைவர் ஜூல்காப்ளி சாரியாத் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை இங்குள்ள ஜாலான் புரோட்டான் சிட்டி – தஞ்சோங் மாலிம் வெளியேறும் பகுதிக்கு அருகே சந்தேக நபரின் காரை நான்கு கிலோமீட்டர் தூரம் போலிசார் துரத்திச் சென்றனர்.

பின் காரை மடக்கிய போலிசாரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

போலிசார் தற்காப்புக்காக சுட்டதில் தொடர் கொள்ளைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்டனர்.

மரணமடைந்தவர்களுக்கு முறையே 29, 37 வயதாகும்.

சம்பந்தப்பட்டவர்களின் காரில் இருந்து எஸ்ஐஜி வகை கைத்துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், இரண்டு பாராங் கத்திகள், கையுறைகள், முகக்கவசம் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles