
தேசம் ஏற்பாட்டில் விருது விழா அண்மையில் மாசா கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்நாட்டு கலைஞர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு வருகையாக ம இ கா துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கலந்துகொண்டு விருது விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அம்மையார் அவர்கள் பல வருடங்களாக கலைஞர்களுக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கு ஏழைகளுக்கும் தன் சொந்த பணத்தை கொடுத்து உதவி வருகிறார் பல வருடங்களாக இந்த சேவையை இன்று வரை செய்து வருகிறார். அவரைப் பாராட்டும் வகையில் இந்த சாதனையாளர் விருது இன்று அவருக்கு டத்தோஸ்ரீ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது என்று தேசம் இயக்குனர் குணாளன் மணியம் தெரிவித்தார்.

இவ்விழாவை தலைமையேற்றுத் துவக்கி வைத்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணனுக்கு ‘Icon of Parliamentarian’ விருது வழங்கப்பட்டது. அதுபோல காரசாரம் உரிமையாளர் ஸ்ரீ பாலிவுட் ஜவுளிக்கடை அஸ்வினுக்கு விருது வழங்கப்பட்டது. தினேஷ் குமார் விமலா பெருமாள் புன்னகை பூ கீதா மற்றும் பல உள்நாட்டு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருத்தினர்களாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், மாஹ்சா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் மற்றும் அதன் தலைமை செயல்முறை இயக்குநர் டாக்டர் அனிதா எனப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


என்னய்யா செய்தி எழுதுறீங்க….
உங்க விருது விழாவுல உள்நாட்டு கலைஞர்களும் தொழிலதிபர்கலாய் வேற யாருமே கலந்து கொள்ளவில்லையா?
செய்தி ஒழுங்கா போடுங்கய்யா
News wrong…
why only focus VIPs only??