
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சிலிலுக்கு எதிராக டிக்டோக்கில் அவதூறாக பேசியதற்கு ஷாலினி பெரியசாமி என்ற பெண் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஷாலினி பெரியசாமி என்பவர் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சிலுக்கு எதிராக அவதூறாக பேசினார்.
சரவா ஊழல் புகாரில் அமைச்சர் சிக்கிக் கொண்டுள்ளார் என்று ஷாலினி பெரியசாமி குற்றம் சாட்டினர்.
இது கர்மாவின் வினை என்று கூறிய அவர் இப்போது அமைச்சரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்துசான் டிக்டோக்கில் வந்த செய்தியை வைத்து அவருக்கு எதிராக இப்படி குறை கூறிவிட்டேன்.
உத்துசான் டிக்டோக் செய்தியை முழுமையாக படிக்காமல் அவர் சரவா ஊழலில் சிக்கி உள்ளார் என்று கூறி விட்டேன். இதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அவர் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வார் என்று ஷாலினி பெரியசாமி டிக்டோக் மூலம் விடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
