28.5 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் மாபெரும் பொங்கல் விழா; ஜனவரி 18ஆம் தேதி பகாவ்வில் நடைபெறும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

🔥 Views : 8
👁 Reading Now : 43

மலேசிய மக்கள் சக்தி கட்சியின்  பொங்கல் விழா நெகிரி செம்பிலான் பகாவ்வில் மாபெரும் அளவில் நடைபெறவுள்ளது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

தைப் பொங்கலை முன்னிட்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு பொங்கல் விழா வரும் ஜனவரி 18 ஆம் தேதி நெகிரி செம்பிலான் பகாவ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தைப்பொங்கல் விழாவில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொங்கல் விழாவுடம் அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்படும் என்று அவர் கூறினார்.

பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு உறி அடித்தல், கோளம் போடுதல், தோரணம் கட்டுதல் போன்ற பாரம்பரிய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

தைப்பொங்கல் விழாவானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய எழுச்சி விழாவாகும்.

அந்த வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் ஜனவரி 18 இல் பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் தைப்பொங்கல் விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles