30.3 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

பணிக் குழுவின் அதிரடி நடவடிக்கையால் தைப்பூசத்தில் பல மாற்றங்கள்!

🔥 Views : 11
👁 Reading Now : 50

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசம் மலேசியாவில் ஒரு மாபெரும் விழாவாக விளங்குகிறது.

அந்த வகையில் வரும் பிப்ரவரி 10,11 ஆம் தேதிகளில் கொண்டாடப்படும் தைப்பூசத்தில் தூய்மையை கடைப்பிடிப்போம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் பணிப்படைத் தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார். பணிக் குழுவின் அதிரடி நடவடிக்கைகளால் தைப்பூச விழாக்களில் நாடு தழுவிய நிலையில் பல மாற்றங்கள் நடந்துள்ளது.

இந்த தைப்பூச விழாக்கள் முறையாக நடைபெறுவதற்கு ஆலய நிர்வாகங்கள் முழு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதே வேளையில் இவ்விழா சமய நெறியுடன், பாதுகாப்பாக, சுத்தமாக நடைபெற வேண்டும் என்பது தான் தைப்பூச பணிக் குழுவின் இலக்காக இருந்தது. தைப்பூச பணிக் குழு தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது.

நீண்ட ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக இந்த பணிக் குழு பல வெற்றியை கண்டுள்ளது. இருந்தாலும் இவ்வாண்டு தனது நடவடிக்கைகளை இப்பணி குழு தொடரவுள்ளது.

பத்துமலை, சுங்கப்பட்டாணி, கோல சிலாங்கூர், ஈப்போ, பினாங்கு உட்பட பல முருகன் ஆலயங்களில் நடவடிக்கை குழுவினர் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு 500 தொண்டூழிய படையினர் கடமையில் ஈடுபடுவார்கள்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு செலாயாங் நகராண்மைக் கழகம் பல இடங்களில் குப்பை தொட்டிகளை அமைப்பார்கள்.

அதே வேளையில்  தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனை, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் அகற்றுவது, மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது என அனைத்து விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும்.

இப் பிரச்சினைகளை தடுக்க கோம்பாக் மாவட்ட போலிஸ்படை, செலயாங் நகராண்மைக் கழகம், ஆலய நிர்வாகம் ஆகியவற்றுடன் பணிக் குழு இணைந்து செயல்படும்.

மேலும் கார் நிறுத்துமிடத்துவதற்கு சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நபர்களுக்கு எதிராக போலிசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல், கார் நிறுத்துமிடம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க பக்தர்கள் முடிந்தால் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும்.

ஆக மொத்தத்தில் தைப்பூச விழாவை பக்தர்கள் சமய நெறியோடு இந்த விழாவை கொண்டாட வேண்டும். இதுவே தைப்பூச பணிக் குழுவின் வேண்டுகோள் என்று குணராஜ் வலியுறுத்தினார். மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் உட்பட பல அமைப்புகள் இணைந்து தூய்மையான தைப்பூசத்தில் பங்கேற்பாளர்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles