29.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

தமிழர்களுக்கென்று கல்விக்காக தமிழ் கல்வி அமைப்பு கட்டாயம் தேவை!

🔥 Views : 11
👁 Reading Now : 38

மலேசிய கலை இலக்கிய படைப்பாளர் அமைப்பின் மாறாத அரிதாரங்கள் எனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியிடும் தங்கப்பதக்கம் வழங்கும் விழாவும் சோமால அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு செந்தமிழ் செல்வர் ஓம் ஸ் தியாகராஜன் தலைமை ஏற்று நடத்தினார். அவர் பேசும்போது மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். கல்விக்கென்று அதிகமான சேவைகளை மாணவர்களுக்கு செய்துள்ளேன்.

இந்த நாட்டில் நம் பிரதமர் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இருந்தாலும் அவருக்கு பிரவீன் பொன்னையா போல ஒரு சிறப்பு அதிகாரி வேண்டுமென்று நினைக்கிறேன். நான் அவரிடம் இதுவரைக்கும் ஒன்றும் கேட்டதில்லை. இப்பொழுது நான் அனைத்து அனைத்திந்தியர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல விஷயத்தை பிரதமரிடம் முன்வைப்பேன் என்றார். தமிழர்களுக்கு என்று வலுவான தமிழ் கல்வி அமைப்பு கட்டாயம் தேவை என்றார்.

இதன் மூலம் பிள்ளைகளுக்கு நல்லது செய்யலாம் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வில் மாணவர்களின் பேச்சாற்றல் சிறப்பாக உள்ளது அவர்களை பாராட்டுகிறேன் ஆசிரியர்களுக்கு மத்தியில் எந்தவித பயமில்லாமல் மாணவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் வாழ்த்துக்கள் என்றார் அனைவரையும் ஏற்பாட்டாளர் அவ்வை க முருகன் வரவேற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles