
இன்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவில் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள இந்திய மாணவர்கள் சிறப்பான
தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதில் நிபோங் திபால் துங்கு அப்துல் ரஹ்மான்
இடைநிலைப்பள்ளி மாணவர் மெவினாஷ் லோகநாதன் அனைத்துப்
பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சியுடன் 9 ஏ பெற்றார்.
சிம்பாங் அம்பாட் தாமான் பெர்வீரா தேசிய இடைநிலைப்பள்ளி மாணவி சர்வினா பாலமுருகன்10 ஏ மற்றும் ,புக்கிட் மெர்தாஜாம் தேசிய உயர் இடைநிலைப்பள்ளி மாணவி சர்வினா சுப்பையா 11 ஏ பெற்றவர்களாவர்.மேலும் பல மாணவர்கள் சிறந்த தேர்ச்சியையும் பெற்றனர்.
