
கோலாலம்பூர் மார்ச் 14-
வருங்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ம இகா தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த விழா மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தற்போது கெடாவில் எம்ய்ட்ஸ் பல்கலைக்கழகத்தில்
இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைவு என்று குறைபாடு எழுந்துள்ளது.
அதே சமயம் சீன மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் அருமையை உணர்ந்து இருக்கிறார்கள்.
இருப்பினும் எம்ய்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் அதிகம் பயில வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்து மதத்தை இழிவுபடுத்திய ஷம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஷம்ரி வினோத் இந்து சமயத்தை மிகவும் இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
இவருக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே பேராக் ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு ம இகா பாடுபடும்.
ம இகா தேர்தல் நடவடிக்கை குழுத் தலைவராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியர்களின் முழு ஆதரவு தேசிய முன்னணிக்கு கிடைக்கும் என்று இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
