29 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

வேலை வாய்ப்புகளில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டை நிறுத்த வேண்டும் – புக்கிட் பெண்டேரா MP ஷெர்லீனா வலியுறுத்தல்

🔥 Views : 8
👁 Reading Now : 25

இந்நாட்டு இந்தியர்களுக்கு வாடகை வீட்டிலிருந்து வேலை கிடைப்பது வரை குதிரைக் கொம்பாக உள்ளது.

இனப் பாகுபாடு என்ற ஒரே விஷயம் அதற்கு குறுக்கே நிற்கிறது.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, பினாங்கு, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீன அப்துல் ரஷிட் வலியுறுத்தியுள்ளார்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஒதுக்குவது கூடாது என்றார் அவர்.

உணவு மற்றும் பான நிறுவனமான MIXUE Malaysia-வின் கிளைக் கடையொன்றின் அண்மைய வேலை விளம்பரத்தில் இனப் பாகுபாட்டைக் காட்டும் வகையில் ‘அனுபவமுள்ள மலாய்க்காரர்களும் சீனர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்” என எழுதப்பட்டிருந்தது சர்சையானது.

இதனால் “ஏன் இந்தியர்களுக்கு அனுபமோ திறமையோ இல்லையா” என வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்தனர்.

அது குறித்து வெளியிட்ட டிக் டோக் வீடியோவில் தான் ஷெர்லீனா அக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles