
பிரிக்பீல்ட்ஸ் சீயோன் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடங்கி மூன்று மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கண் பரிசோதனை இருதய பரிசோதனை மற்றும் பல நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் இங்கு வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தின் போதகர் டேவிட் தேவப்பிரியன் கூறும்போது, சீயோன் பேராலயத்தில் பல சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும் பரிசோதனைகளும் அதற்கு ஏற்ப வழிமுறைகளும் சிறந்த மருத்துவர்கள் வழங்கப்பட்டது. இதில் அதிகமான பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்றார்.


