26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மலேசிய இந்திய நம்பிக்கை சங்கம் அறிமுக விழா!

மலேசிய இந்திய நம்பிக்கை சங்கம் அறிமுக விழா அண்மையில் லெபோ அப்பாங் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் தேசிய தலைவர் எம்ஜிஆர் கோபி பேசும்போது, மலேசிய இந்திய நம்பிக்கை சங்கம் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சங்கத்தின் மூலம் ஆதரவற்றோர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். அதுபோல பிரதமர் அன்வர் அவர்களுக்கு இச்சங்கம் என்றும் முழு ஆதரவு கொடுக்கும் என்றார். எம்ஜிஆர் வழியில் ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த சங்கம் உதயமாகியுள்ளது. அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நாம் அவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles