
கெடா, லங்காவியிலுள்ள டாயாங் புந்திங் ஏரியில் 55 வயதுடைய இந்தியச் சுற்றுலாப் பயணி மூழ்கி மரணமடைந்ததாக லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் Mohd Zamri Abdul Ghani தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது தரப்புக்கு இன்றூ மதியம் 12.05 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன் பின், மீட்புக் குழு அங்கு விரைந்துள்ளது.
மீட்புக் குழுவினரால் விவேக் அசோக் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் பிற்பகல் 2.29 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மீட்பு குழு ஏரியில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிற்பகல் 2.29 மணிக்கு மீட்கப்பட்டது.
மேலும் சுகாதார அமைச்சக ஊழியர்களால் சம்பவ இடத்திலேயே விவேக் அசோக் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் லைஃப் ஜாக்கெட் அணியாமல் ஏரியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகMohd Zamri Abdul Ghani கூறினார்.
பின்னர் உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று லங்காவி காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.
