
இவ்வாண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு திரெங்கானுவில் கூடுதல் விடுமுறை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஹமத் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.
கூடுதல் விடுமுறை குறித்து மாநில அரசு முடிவு செய்து விட்டதாவும் தற்போது திரங்கானு சுல்தானின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் பின் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் அதுவரைப் பொது மக்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று அவர் கூறினார்.
அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், திரெங்கானு மக்களுக்கு நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு உதவி நிதி வழங்குவது குறித்து மாநில அரசு இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அஹமத் சம்சூரி கூறினார்.
மாநிங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.
பேச்சுவார்த்தைக்குப் பின் தேவைப்படும் நிதி குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
