
பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக கட்டுபடுத்தும் பரிந்துரையை கலந்தாலோசிக்க அமைச்சரவை குழு இணக்கம் தெரிவித்தனர்
தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்
இந்த விவகாரம் இன்னும் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் ஆழமான கலந்தாலோசனை அவசியம் என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்
மாநில அளவிலான மதிப்பீடுகளும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களும் கொண்டு வர வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக, உருமாற்றத்தின் ஓர் அங்கமாக பிரதமர் பதவிக்காலம் 10 ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்தும் பரிந்துரையை தாம் ஆதரிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விவகாரம் தொடர்பான நடைமுறை சீரான முறையிலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் ஆதரவும் கிடைக்கப்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்



