27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

மஸ்ஜிட் இ்ந்தியா வீரா பத்ரகாளியம்மன் கோவில் உடைக்கப்படவில்லை! இடமாற்றத்திற்கு பேச்சு வார்த்தை தொடர்கிறது

கோலாலம்பூர் , மார்ச் 21-
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள வீரா பத்ரகாளியம்மன் கோவில் படைக்கப்படுகிறது என்ற செய்தியில் உண்மை இல்லை.

கோவிலை உடைத்து மஸ்ஜிட் கட்டப்படுகிறது என்று வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை.

பத்ர காளியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலம் தனியாருக்குச் சொந்தமானது.

இது அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. JAKEL நிறுவனம் நிலத்தை வாங்கி உள்ளது.

பத்ரா காளியம்மன் இடமாற்றம் தொடர்பாக கோவில் நிர்வாகத்துடன் பத்து ஆண்டுகள் மேலாக பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று ஜேக்கல் குழும நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரி டத்தோ சைட் நஷ்ரூல் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகமும் எங்களுடன் இணைந்து பேச்சு வார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இந்த கோவில் உடைக்கப்படுகிறது என்று கூறப்படும் குற்றச் சாட்டில் உண்மை இல்லை.

பத்ரா காளியம்மன் கோவில் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு எந்தவொரு சிக்கல்களும் இல்லை. கோவில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை தொடர்கிறது.

இந்த விவகாரத்தில் பத்ரா காளியம்மன் கோவிலுக்கு இழப்பீடும் மற்றும் பொருத்தமான புதிய இடமும் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

ஜேக்கல் நிறுவனத்தின் சட்ட வழக்கறிஞர் தலைவர் அய்மான் டசூக்கியும் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles