
கோலாலம்பூர் மார்ச் 20-
சுமார் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள வீரா பத்ரகாளியம்மன் கோவில் இதே இடத்தில் இருக்கட்டும் என்று கோவில் தலைவர் பார்த்தீபன் தெரிவித்தார்.
இந்த கோவிலை அகற்றினால் 130 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க வரலாறு அழிக்கப்படும்.
ஆகவே இந்த கோவில் இதே இடத்தில் இருக்கட்டும். நாங்களும் இடம் மாற மாட்டோம்.
கோவிலை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்கிறோம் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை.
இந்த கோவில் நிலம் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது குறித்தும் எங்களுக்கு தெரிய படுத்தவில்லை.
கோவில் அருகில் மஸ்ஜிட் காட்டுவதாக இருந்தால் கட்டி கொள்ளட்டும்.
கோவில் அருகில் மஸ்ஜிட் கட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம் .
ஆனால்
கோவிலை அகற்றினால் புரானத்தை அழிப்பதற்கு சமமாகி விடும்.
மஸ்ஜிட் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்த கோவில் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக பெரும் வேதனையை தெரிவித்துள்ளனர்
ஆகவே இந்த கோவில் இதே இடத்தில் நிலைத்து இருக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மஸ்ஜிட் இந்திய வீரா பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று மதியம் கோவிலுக்கு வருகை புரிந்து நிலவரத்தை நேரில் கேட்டறிந்தார்.
இந்த கோவில் இதே இடத்தில் நிலைத்து இருக்க உதவி செய்யுங்கள் என்று டத்தோஸ்ரீ இரமணனை கோவில் தலைவர் பார்த்தீபன் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
