28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பூட்டப்பட்ட பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டது! பக்தர்கள் இனிமேல் அச்சமின்றி ஆலயத்திற்கு வரலாம்

தலைநகரில் புகழ்பெற்ற பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தின் கதவு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தை தீர்க்க தரிசிகள் சன்னிதான நிர்வாகம் முறையாக வழி நடத்தி வந்தது.

இரு வாரங்களுக்கு முன்பு இந்து மகா சபா ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற ஆணையை பெற்று ஆலயத்தை வழிநடத்தும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது என்று கூறி ஆலயத்தை பூட்டியது.

ஆலயத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை இந்து மகா சபா பெற்றது தொடர்பில் எங்களுக்கு எதையும் தெரிய படுத்தவில்லை.

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இந்து மகா சபா இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது என்று ஆலயத் தலைவர் ராஜசிங்கம் தெரிவித்தார்.

இந்து மகா சபா இப்போது சட்டப்பூர்வ அமைப்பு இல்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்து மகா சபாவின் பதிவு ரத்தானது.

ஒரு ரத்தான அமைப்பு ஆலயத்தை அபகரித்து சொந்தம் கொண்டாடுவது சட்டப்படி தவறு என்று அவர் சொன்னார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கஸ்தூரி கிருஷ்ணன் மூலமாக இந்து மகா சபாவுக்கு எதிராக தீர்க்க தரிசிகள் சன்னிதான நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு மனுவை தொடுத்து தற்காலிக தடையுத்தரவை பெற்றதாக ஆலயத் தலைவர் ராஜசிங்கம் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை பின் பற்றி பூட்டப்பட்ட பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் பக்தர்களுக்கு திறந்த விடப்பட்டதாக அவர் சொன்னார்.

இன்று முதல் ஆலயத்தில் பூசைகள் முறையாக நடைபெறும். பக்தர்கள் அச்சமின்றி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles