
Covid-19 தொற்றுநோய் இந்நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் தொடர்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்க மருத்துவமனைகளுக்கு உதவி புரியும் நோக்கத்தில் மலேசிய நகரத்தார்கள் இயக்கத்தினர் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் துரித கருவி ஒன்றை வழங்கியுள்ளனர். செர்டாங் மருத்துவமனையில் நேற்று முதற்கட்டமாக இந்த கருவி வழங்கப்பட்டது என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
டத்தின் டாக்டர் ஜானகி, டத்தோ டாக்டர் என். கதிரேசன், டாக்டர் வி. ரமேஷ், பி. சிவசங்கரன்சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மருத்துவ கருவியை செரடாங் மருத்துவமனை இயக்குனர் ரோஹன ஜோஹரி இடம் ஒப்படைத்தனர்.
இந்நடவடிக்கைக்கு தான் ஸ்ரீ பாலன் சிறப்பு வருகை புரிந்தார் மக்களின் நலன் காக்கும் மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைக்கு உதவ முன்வந்திருக்கும் இவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே இந்த மருத்துவமனைக்கு உயர்தர மருத்துவ கருவி வழங்கும் நடவடிக்கை முதன்முறையாக தொடங்கப்பட்டாலும் தொடர்ந்து பினாங்கு, அலோர் ஸ்டார் மருத்துவமனை உட்பட ஐந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒரு கருவியின் விலை சுமார் 30,000 வெளியாகும். எனவே தாங்கள் ஐந்து கருவிகள் வழங்குவதற்கான நிதியை நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.



