32.5 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

🔴 “கோவில் நிலம் கோர்ட் செல்லாதது ஏன்? – மடானி பள்ளிவாசலுக்காக வேகமாக முடிவு!

🔥 Views : 20
👁 Reading Now : 26

“தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில சர்ச்சை – நீதிமன்றம் தவிர்க்கப்பட்ட பின்னணி!”

கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில உரிமை விவகாரம், நீதிமன்றத்திற்குச் செல்லாதது ஏன்? என பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸாலேஹா முஸ்தபா விளக்கம் அளித்துள்ளார்.

“நீதிமன்றம் சென்றால் பல ஆண்டுகள் தாமதம்!”
அமைச்சரின் கூற்றுப்படி, நில உரிமை பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால், மடானி பள்ளிவாசல் திட்டம் காலதாமதமாவதுடன், நில சர்ச்சைக்கு தீர்வு கிடைப்பதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.

“நல்லிணக்க பேச்சுவார்த்தையால் சர்ச்சை முடிவு!”
ஜாகேல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் பாஃரோஸ் முகமட் ஜாகேல் இதற்கு வரவேற்பு தெரிவித்து, “அமைச்சர் டாக்டர் ஸாலேஹாவின் ஆலோசனையின் பேரிலேயே நீதிமன்ற வழியைக் கை விடி, நல்லிணக்க முறையில் பேசித் தீர்க்க தீர்மானித்தோம்” என்று கூறியுள்ளார்.

🔴 “நீதிமன்ற வழக்கு வந்திருந்தால் பள்ளிவாசல் கட்ட முடியாது!”
“இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால், மடானி பள்ளிவாசல் தற்போதைக்கு கட்டப்பட முடியாது என்பதால், நீதிமன்ற வழக்கு தவிர்க்கப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.

“கோவில் நிலத்தை வாங்கிய ஜாகேல் – கோர்ட் வழக்கின்றி தீர்வு?”
ஜாகேல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த கோவில் நிலத்தில் மடானி பள்ளிவாசல் கட்டுவதற்கு தடையாக நீதிமன்ற வழக்கு அமையக்கூடாது என்பதால், நல்லிணக்கத்திலேயே முடிவுக்கு வந்தோம் என்று பாஃரோஸ் முகமட் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles