32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

“Nasi Lemak”, “Alamak” – ஆங்கில அகராதியில் மலேசிய & சிங்கப்பூர் வார்த்தைகள்!

“மொழிபெயர்க்க முடியாத 12 சொற்கள் OED-ல் – ஆங்கில வார்த்தையாக மாறும் அன்றாட மலேசிய உச்சரிப்புகள்!”

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பரவலாக பயன்படுத்தப்படும் “Nasi Lemak”, “Alamak” உள்ளிட்ட 12 மலாய், சீனம், தமிழ் கலந்த சொற்கள், பிரபல Oxford English Dictionary (OED)-யின் அண்மைய புதுப்பிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

“Alamak – அதிர்ச்சி, திகைப்பு, சீற்றம் எல்லாம் ஒரே வார்த்தையில்!”
OED இணையத்தளத்தின் கூற்றுப்படி, “Alamak” என்ற வார்த்தை திடீர் அதிர்ச்சி, ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த மலேசியா & சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுகிறது.

“Nasi Lemak – மொழிபெயர்ப்பு தேவையா?”
மலேசியாவின் சொந்த உணவுப் பாரம்பரியமான “Nasi Lemak” என்ற வார்த்தை, நேரடி மொழிபெயர்ப்பு இல்லாததால், ஆங்கில வார்த்தையாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

“Cantonese வார்த்தை ‘Tapau’ & ரேஸிங் கும்பலின் ‘Mat Rempit’ கூட இணைந்தன!”
உணவை எடுத்துச் செல்வதை (Takeaway food) குறிக்கும் “Tapau” – இது மலேசிய & சிங்கப்பூரின் அன்றாட வாழ்க்கையில் பொதுவாகப் பயன்படும் Cantonese வார்த்தையாகும்.
அதேபோல், சட்டவிரோத மோட்டார் பந்தயங்களில் ஈடுபடுவோரை குறிக்கும் “Mat Rempit” என்ற சொற்களும் OED-யில் சேர்க்கப்பட்டுள்ளன.

🔴 “மலேசியா – சிங்கப்பூர் மொழியியல் செல்வாக்கு அதிகரிக்கிறதா?”
இந்த வார்த்தைகள் OED-யில் சேர்ப்பது, ஆங்கிலம் பேசும் உலகத்தில் மலேசிய & சிங்கப்பூர் வார்த்தைகளின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக மொழியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles