29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பேராசிரியர் இராமசாமி ஒளி ஏற்றி வைத்த ” சுங்கை கிச்சில் தோட்டம்”

🔥 Views : 9
👁 Reading Now : 50
To listen this news in Tamil, Please click play button

பினாங்கின் தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள சுங்கை கிச்சில் என்ற
தோட்டத்தை தனியார் நில உரிமையாளரிடமிருந்து மீட்டெடுத்து,தோட்ட
மக்களிடமே ஒப்படைத்து பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர்
பி .இராமசாமி வரலாறு படைத்துள்ளார்..
2010 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக தோட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு 23 இந்தியக் குடும்பங்களுக்கு அந்த நில உரிமையாளர் கொடுத்து வந்த தொல்லைகள்,


மிரட்டல்கள் அனைத்துக்கும் கொஞ்சமும் அஞ்சாமல்,பினாங்கு மாநில
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தோடு இணைந்து,பினாங்கு இந்து
அறப்பணி வாரியம் அந்த 5 ஏக்கர் நிலத்தை மக்கள் நலனுக்காக வாங்கி
சாதனை படைத்து விட்டார்.
தமது அரசியல் வாழ்க்கையும்,
போராட்டமும் பாட்டாளி சமூகத்துக்கே என்பதை,சுங்கை கிச்சில் தோட்ட
மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை.
பல போராட்டங்களுக்குப் பின்னர் சுங்கை கிச்சில் மக்களுக்காக வாங்கப்பட்ட இந்த நிலத்தில் தரை வீடுகள் கட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles