
நோய்த்தொற்று காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்னைகளுக்கு உதவும் நோக்கில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தலைமையில் ‘சிஸ்வா ம.இ.கா’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது.
இதற்குப் பொறுப்பாளராக கிஸ்வா அம்பிகாபதி மற்றும் ஷாலினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் மற்றும் அவசர உதவிகள் வழங்கும் பொருட்டு இந்த ‘சிஸ்வா ம.இ.கா’ குழு செயல்படும்.
பல இந்திய மாணவர்கள் வீட்டிற்குத் திருப்பமுடியாமல் பல்கலைக்கழக தங்குவிடுதியில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் ‘சிஸ்வா ம.இ.கா’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குத் தேவையான உணவு வசதி மற்றும் அவசர உதவி செய்து தரப்படும் என்று அதன் பொறுப்பாளர்கள் கிஸ்வா, ஷாலினி தெரிவித்தனர்.
உதவிகளைப் பெற விரும்பும் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள், ‘சிஸ்வா ம.இ.கா’ (siswa mic) FB Twitter, insta, வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



