28.6 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

கடும் நோயாளிகளுக்கு தடுப்பூசி!

🔥 Views : 37
👁 Reading Now : 52

கடுமையான நோயினால் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்வதற்காக நடமாடும் பிரிவை சிலாங்கூர் மாநில அரசு உருவாக்கவுள்ளது.
இந்நடவடிக்கையின் வாயிலாக அதிகமானோர் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்யும் அதேவேளையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்க முடியும் என்று சிலாங்கூர் ஆட்சிக்கு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பி40 பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய அவர், பெடுலி சிஹாட் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவுமிக்க அன்னையர் திட்டம் ஆகியவற்றின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles