29.6 C
Kuala Lumpur
Monday, June 22, 2026

Vetri

🚨 புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு – ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் ‘அவசர உதவி மையமாக’ மாற்றம்!🔥

🔥 Views : 7
👁 Reading Now : 39

புத்ரா ஹைட்ஸில் நடந்த பயங்கர எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் ஒரு அவசர உதவி மையமாக மாறியது.

🔴 விபத்து இடத்துக்கு அருகிலிருந்த மக்கள் அலறிக்கொண்டு உதவி கோரிய நிலையில், ஆலயம் உடனடியாக கதவைத் திறந்து அவர்களை உள்ளே அனுமதித்தது.

👉 “ஆலயத் தலைவர், குழு உறுப்பினர்கள், பக்தர்கள் அனைவரும் உடனடியாக மொத்த சேவையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்தனர்” என ஆலய ஆலோசகர் ஆர். மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

🚑 அதிகாரிகள் வருவதற்குள், ஆலய குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கினர்.

ஒரு மணி நேரத்திற்குள் போலிஸ் மற்றும் மருத்துவ குழுவினர் வருகையால், ஆலயம் முறையான அவசர உதவி மையமாக மாற்றப்பட்டது.

🙏 இந்த சூழ்நிலையில் ஆலயத்தின் மனிதாபிமான செயல் பாராட்டுக்குரியது.

📢 சம்பவம் தொடர்பான மேலும் தகவலுக்கு எங்களுடன் இருங்கள்! 🔥

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles