
செந்தோசா மக்கள் சேவை மையம் காரில் தங்கியிருந்த மாதுக்கு உதவவில்லை என்பது திட்டமிட்ட வதந்தியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் பரப்பி, மக்கள் சேவை மையம் மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
🔴 உண்மைகள் என்ன?
- 1. மக்கள் சேவை மையத்திற்கு வரும் ஒவ்வொருவரும் பதிவு செய்யப்படுவர் – ஆனால் அந்த மாதுவின் பெயர் எங்கும் இல்லை.
- 2. மக்கள் சேவை மையம் உதவி செய்ய மறுத்ததாகக் கூறப்படும் இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர்கள் அங்கு இல்லையே!
- 3. மேலும், மற்றொரு வீடியோவில் அவருக்கு உதவி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔴 சமூக ஊடகங்களில் இது போன்று தொடரும் வீடியோக்கள் – பின்னணியில் யார்?
இந்த விவகாரம் தொடர்ச்சியாக புதிய வீடியோக்களுடன் பரப்பப்படுவது ஒரு தீவிர அரசியல் சதியாக பார்க்கப்படுகிறது.
செந்தோசா மக்கள் சேவை மையத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மீதும் திட்டமிட்ட முறையில் ஒரு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறதா?
🔴 ஊடகத்தின் பங்கு – பொய் செய்தி பரப்பியவர்களை தண்டிக்குமா போலீஸ்?
இந்த தவறான தகவலை பரப்பிய ஊடகத்தின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு உண்மை தெரிய வரும், பொய்யான தகவல்களை பரப்புவோர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
