32.9 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

பாபாவின் “ஒன்பது பேரலைகள்” நூல் வெளியீடு – ஓம்ஸ் பா. தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

🔥 Views : 28
👁 Reading Now : 21

அண்மையில் தோட்ட மளிகையில் நடைபெற்ற விழாவில், பாபாவின் “ஒன்பது பேரலைகள்” என்ற ஆன்மிக நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஓம்ஸ் பா. தியாகராஜன் நூலை வெளியீடு செய்து பேசினார்.

“நான் வள்ளலார் பக்தர் என்றாலும், பாபாவையும் நான் நேசிக்கிறேன். அவர் மீது நாட்டுப்பூராக பக்தி அதிகரித்து வருகிறது. பாபா சென்டர்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. கண்ணன் அவர்கள் தொடர்ந்து இதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார்,” என்றார் அவர்.

இந்த நூலை எழுதிய டத்தோ முருகேசு குறித்து அவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்:
“இந்த நூல் பாபா வழங்கிய ஒரு வரப்பிரசாதம். மிக அருமையாக, பக்திப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரின் உழைப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.”

நூல் வெளியீட்டில் இந்நிகழ்வில் மனோகரன் மலையாளம், கா.முருகன், டத்தோ சகாதேவன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்பாபா பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள், உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles