
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுத இளம்பரிதி தலைமையில் இன்று அமரர் இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு நாள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
நாடாறிந்த அறிவிப்பாளர் பொன்.கோகிலம் அறிவிப்போடு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
நெகிரி செம்பிலான் மாநில இந்தியர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சேரன் நடராஜா, டத்தோ ஜே.பி.கணேசன் உட்பட பலரும் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
எம்.கே.கருணா கரன் அவர்களின் வரவேற்புரை யோடு இந்த விழா இனிதே தொடங்கியது.
ஏற்பாட்டுக் குழு தலைவர் மு.திருநாவுக்கரசு தமது உரையில் அமரர் ஆதி குமணன் அவர்கள் ஒரு போராளி என்று வர்ணித்தார்.
அமரர் ஆதி குமணனை பற்றி வாசித்த கவிதையை கவிஞர் அமுத இளம்பரிதியிடம் எழுத்தாளர் சீரிய நாதன் வழங்கினார்.
இந்த விழாவில் தலைமையுரை யாற்றிய லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அமரர் ஆதி குமணன் ஆற்றிய பணிகளை வெகுவாக பாராட்டினார்.

மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் தனக்கு ஒரு இடம் பிடித்த ஆதி குமணன் அவர்கள் மறைந்து 20 ஆண்டுகள் கடந்தும் அவரை நினைவு கூர்ந்து விழா நடத்துவது பெருமையளிக்கிறது என்றார்.
அவர் மறைந்தாலும் இன்னமும் நினைவு கூறப்படும் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில்
அமரர் ஆதி குமணனின் 25 ஆம் ஆண்டு நினைவு விழா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.
இந்த விவகாரம் முத்தாய்ப்பாக திருமதி மகாலெட்சுமி அவர்களுக்கு இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு பரிசும் தலா ஆயிரம் வெள்ளியும் பாவலர் கோவதன் அவர்களுக்கு ஆதி குமணன் நினைவு பரிசும் 3,000 வெள்ளி ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிரி செம்பிலான் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இந்த வெகுமதிகள் வழங்கப்பட்டது.
