28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அட்சயத் திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் – மஸ்ஜித் இந்தியா கன்னிகா தங்க மாளிகையில் கூட்டம்

🔥 Views : 14
👁 Reading Now : 44

நேற்று நடைபெற்ற அட்சயத் திருதியையை முன்னிட்டு கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள கன்னிகா தங்க மாளிகையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு தங்க நகைகளை வாங்கும் ஆர்வத்தை காட்டினர்.

அட்சயத் திருதியை, அதிக அதிஷ்டம் தரும் நாளாக பரிகணிக்கப்படுகிறது. “அட்சயம்” என்ற சொல் “அழிவில்லாதது” என்றும் “நிலைத்திருப்பது” என்றும் பொருள் படுகிறது. இதனை நினைவூட்டிய கன்னிகா தங்க மாளிகை மற்றும் லால் கோல்ட் நகைக் கடை உரிமையாளர் டத்தோ விக்னேஸ்வரன், “இந்த நாளில் தங்கம் உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்களை வாங்குவது நன்மையை அதிகரிக்கும்” என்றார்.

“பாரம்பரிய ரீதியாக, அட்சயத் திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது, செல்வ விருத்திக்கும், அதிர்ஷ்டத்திற்கும் அடையாளமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வை மேலும் சிறப்பாக்க, மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேரில் வந்து தங்கம் வாங்கினார். இதுவே, மக்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்த நிகழ்வாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles