
ஜெகா என்கிற டத்தோ ஜெகதீசன் அவர்களின் பிறந்தநாள் விழா அண்மையில் சீர் டி சாய் பாபா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஏற்பாடுகளை சாய்பாபா சென்டர் ஆலோசகர் கண்ணன் மிகச் சிறப்பாக கையாள்ந்தார். அனைத்து விருந்தினர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கண்ணன், பல பாபா சென்டர்களை நடத்தியவர், விழாவில் உரையாற்றியபோது,
“பாபா நமக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பார். டத்தோ ஜெகதீசன் நல்ல மனுஷர்; பல சமூக சேவைகளை செய்துள்ளார். அவரும் அவருடைய குடும்பமும் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்,” என்றார்.
இவ்விழா, பாபா பக்தர்களுக்கும், சமூக சேவை செய்பவர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்தது.
