28.7 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

🎶 மலேசியா – தமிழக கலைஞர்கள் இணைந்து ‘சரிகமப’ இசை நிகழ்ச்சி

🔥 Views : 20
👁 Reading Now : 25

மலேசியக் கலைஞர்கள் மற்றும் தமிழகக் கலைஞர்கள் இணைந்து ஒருங்கிணைக்கும் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு அம்மன் உணவக மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தஸ்லி உரிமையாளர் டத்தோ ரவி, டத்தோ ஹரி, கிருஷ்ணன், டத்தோ கணேசன், ஸ்ரீ முருகன் கல்வி இயக்குனர் சுரேன் மற்றும் தாமரை ஜுவல்லரி உரிமையாளர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக ஜீ தொலைக்காட்சியில் நடைபெற்ற போட்டியில் பரிசு வென்று புகழ் பெற்ற மலேசியப் பாடகி ஹேமித்ரா இந்த சந்திப்பின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஷால் உரையாற்றும்போது,

மலேசிய பாடகி ஹேமித்ரா தமிழகத்தில் வெற்றி பெற்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இது பெரும் ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தி.
இந்த நிகழ்ச்சி மலேசியா மற்றும் தமிழக கலைஞர்களின் திறமைகளை இணைக்கும் ஒரு மேடையாக அமையும். மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரிகமப’ இசை நிகழ்ச்சி, இசை பிரியர்களுக்கு ஒரு கலாசார பாலமாக அமைந்து, இரு நாடுகளின் இசை அனுபவங்களை ஒன்று சேர்க்கும் புதிய முயற்சியாக அமைவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வருகின்ற மாதம் 28ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு டேவன் வவாசான் மெனாரா பிஜிஆர்எம் செராசில் நடைபெற உள்ளது. இதன் டிக்கெட்டுகளை டிக்கெட் டூ யூ எனும் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.🎶

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles