28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

மலேசியாவில் முதன்மை நாதஸ்வரம் – தவில் பெருந்திருவிழா

🔥 Views : 11
👁 Reading Now : 35

வருகின்ற ஜூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு செந்தூள் கன்வேஷன் சென்டரில் முதன்மை நாதஸ்வரம் தவில் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இங்கு நாதஸ்வர தமிழ் சங்கத்தின் தேசிய தலைவர் கணேசன் பேசும்போது இந்த தொழில் மங்களகரமான தொழில். இது ஆலயங்களிலும் திருமண வீடுகளிலும் விசேஷங்களிலும் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. இதை அழிய விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். மலேசிய கலைஞர்களுக்கு முக்கிய பங்களிப்பு இருக்க வேண்டும் இவர்கள் அனைவரும் முறையாக பயிற்சி பெற்று நாதஸ்வர தவில் வாசித்து வருகிறார்கள். இப்ப பெருவிழா மிக கோளகாலமாக விருந்துடன் நடைபெற உள்ளது இசை நிகழ்ச்சியின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியை தொடக்கி வைத்து கவிமாறன் பேசும்போது, உள்ளூர் உள்ளூர் தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு ஆலயங்களிலும் மற்ற நிகழ்ச்சியிலும் ஆதரவு கொடுங்கள். இவர்கள் முறையாக சங்கீதத்தை இறைவன் ஆசியோடு முறையாக பயிற்சி பெற்று வாசித்து வருகிறார்கள். நாதஸ்வரம் தவில் பிரிக்க முடியாததாகும். அனைவரும் இவர்களுக்கு ஆர்வம் தர வேண்டும் என்று கவிமாறன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles