27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

முடி திருத்தும் நிலையங்களுக்கு எப்போது விடிவுகாலம்?

🔥 Views : 33
👁 Reading Now : 43

மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பூட்டிக்கிடந்த பூ கடைகள் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம் இதே காலகட்டத்தில் நாட்டிலுள்ள முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது வேதனையாகும்.
பல துறைகள் தங்களது வியாபாரத்தை செய்வதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம் முடிதிருத்தும் நிலையங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் மனிதவள அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் வலியுறுத்தினார்.
முடிதிருத்தும் நிலையங்கள் மூடப் பட்டிருப்பதால் அதன் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் இழப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். மாதம்தோறும் முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
கடைகளுக்கு வாடகை கட்ட வேண்டும் . வருமானம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள்.
.ஆகவே இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles