25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மஇகா கெப்போங் தொகுதி ஆண்டுக் கூட்டம்!

🔥 Views : 7
👁 Reading Now : 36

அண்மையில் மஇகா கெப்போங் தொகுதி ஏற்பாட்டில் மஇகா ஆண்டு கூட்டம் ஜலான் ஈப்போவில் அமைந்துள்ள உமாராணி உணவகத்தில் நடைபெற்றது. இதற்கு மஇகா கெப்போங் தொகுதி தலைவரும், கூட்டரசு பிரதேச மஇகா துனைச் செயலாளருமாகிய இரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கூட்டரசு பிரதேச மஇகா தலைவர் டத்தோ சைமன் ராஜா மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குணாளன் என பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய இரா. கிருஷ்ணமூர்த்தி துன்சாமி வேலுவை என்றும் நாம் மறக்கக்கூடாது அவர்தான் இன்று இந்த கட்சி நிலைத்து நிற்கிறது. அவர் உருவாக்கிய கல்லூரி இன்று எல்லோருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து வருகிறார். நம் கட்சியை பற்றி ஆயிரம் பேர் குறை கூறினாலும் மஇகா என்றும் உறுதியாக இருக்கும்.

மக்கள் மஇகா பக்கம் திரும்பி வருகின்றனர். எல்லோருக்கும் ஒரு தாய் கட்சி மஇகா தான். தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஷ்வரன் மாற்றும் டத்தோஸ்ரீ சரவணன் இணைந்து இருவரும் சிறப்பான முறையில் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். இளைஞர்கள் அனைவரும் உறுப்பினர்களாக அதிகமானோர் நம் கட்சியில் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles