25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மாறுவோம் மாற்றுவோம்! வெற்றி பெறுவது எங்கள் அணி!

🔥 Views : 6
👁 Reading Now : 22

இந்து சங்கத் தேர்தலில் எங்கள் அணி சார்பாக 10 பேர் போட்டியிட உள்ளோம் எங்களுக்கு பலமான ஆதரவு உள்ளது அமோக ஆதரவோடு வெற்றி பெறுவோம் என்று மலேசிய இந்து சங்கத்தின் நடப்பு உதவித் தலைவர் கணேஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, தலைவர் தங்க கணேசன் நடப்பு தலைவராக மூன்றாண்டு வரை நீடிக்க முடியும் அதற்குப் பிறகு என்னிடம் தலைவர் பதவியை தருகிறேன் ஆனால் இன்றுவரை அதை செயல்படுத்தவில்லை மேலும் இந்து சங்கத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கையாண்டார் நானும் பலமுறை சொல்லியுள்ளேன் கோயில் பிரச்சனை ஆனாலும் மற்ற பிரச்சனை ஆனாலும் அவர் தான் பொறுப்பு அவர் தான் தலைவர் அவர் ஒரு அணிய அமைத்து செயல்படுகிறார் அவர்கள் செய்யும் செயல்கள் தான் அவருக்கு முக்கியமாக தெரியும் எங்களுக்கு ஒரு வேலையை கொடுத்து அதை செய்ய சொல்லியுள்ளார் அப்படி இருக்கும்போது தலைவர் தான் பொறுப்பு இருக்க வேண்டும் நாங்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது தத்துவ மோகன் மோகன் ஷானோடு சண்டை போட்டுக் கொண்டு இப்பொழுது இருவரும் கைகோர்த்துக் கொள்கிறார்கள் எங்களுக்கு எல்லோரும் முக்கியம் பொதுவாக இந்து சங்கம் ஒரு நல்ல பெயரை வைத்துள்ளது அதை காப்பாற்ற வேண்டும் அதற்கு முழுமையான தலைமைத்துவம் வேண்டும் அப்படி இருந்தால் தான் அதை நாம் செயல்படுத்த முடியும் அதனால் தான் இப்பொழுது எங்கள் அணியோடு கலந்து முடிவு செய்து போட்டியிடுகிறோம் நாங்கள் வெற்றி பெற்றால் முழுமையாக செய்வோம் சேவைகளை தொடர்ந்து செய்வோம் எங்களுக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள் கஷ்டப்படும்போது தூக்கி தூக்கி விட்டவர்களை மறக்க மாட்டோம் அரசியல் தலையீடு கிடையாது அரசியல் தலைவர்கள் உதவி செய்தால் அதை நாம் மறக்க கூடாது எல்லோரும் நமக்கு வேண்டும் முழு மனதோடு வெற்றி நிச்சயம் என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles