27.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி கொடுங்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 30

மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கும்படி மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் எங்களின் வியாபாரம் 80 விழுக்காடு பாதித்துவிட்டது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு உணவும் கொடுக்க முடியவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் 12,000 உணவகங்களை எங்களது 4,200 உறுப்பினர்கள் நடத்தி வருகிறார்கள். காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை சிற்றுண்டியை வாங்க முடியவில்லை. மேலும் 8 மணிக்கு மேல் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும் உணவு வாங்க முடியவில்லை .
ஆகவே அரசாங்கம் தற்போது வழங்கி இருக்கும் நேரத்தை பரிசீலிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles