29.1 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தேர்வு!

🔥 Views : 28
👁 Reading Now : 39

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் ஆண்டு பேராளர் மாநாடு இன்று சுபாங் டிசோர்ட்ஸ் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

இதில் 2025-2027 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தி வந்த டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தலைவராக பேராளர்கள் முன் பொழிந்தனர்.

அந்த வகையில் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தின் துணைத் தலைவராக சண்முகராசு தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் செயலாளராக வீரபாலன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை செயலாளராக டத்தின்ஸ்ரீ டாக்டர் எஸ்.யூகேஸ்வரி தேர்வு தேர்வானார்.

பொருளாளராக மனோகரன் மீண்டும் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.

முன்பு உதவித் தலைவராக இருந்த டத்தோ இப்ராஹிம் இப்போது நிர்வாக மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் நிர்வாக மன்ற உறுப்பினராக டத்தோ யூவபாலன், புஷ்பநாதன், மகேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles