27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

மும்மொழி திருக்குறள் புத்தகம் விரைவில் வெளியீடு — 10 ஆண்டுகள் முயற்சியின் பலன்

🔥 Views : 21
👁 Reading Now : 34

பழந்தமிழ் இலக்கியத்தில் மறை நூல் என போற்றப்படும் திருக்குறள், இப்போது மும்மொழிகளில் வெளிவரவிருக்கிறது. குயில் ஜெயபக்தி புத்தக நிறுவனம், தமிழ், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிடவுள்ளது.

இந்த மாபெரும் முயற்சியைப் பற்றி நிறுவன உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், “பத்து ஆண்டுகள் கடும் உழைப்பின் பின்னர் இந்த மும்மொழி திருக்குறள் புத்தகம் வெற்றிகரமாக தயாரானது. மாணவர்கள் மற்றும் மலாய், ஆங்கில வாசகர்கள் திருக்குறளின் அர்த்தத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற திருக்குறள், 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்ட தொன்மையான தமிழ் அற இலக்கியமாகும். அறம், பொருள், இன்பம் எனும் மூன்று தொகுதிகளாகப் பிரிந்துள்ள இந்த நூல், மதச்சார்பற்ற தன்மைக்கும் பொதுத்தன்மைக்கும் உலகளவில் மதிப்புப் பெற்றுள்ளது. இதனை இயற்றியவர் புகழ்மிக்க திருவள்ளுவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles