
தலைநகர் ஜாலான் ஈப்போ 4ஆவது மைலில், உமாராணி குழுமத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உமாராணி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து சிறப்பித்தார்.
மேலும், விலாயா மாநில மஇகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, இளைஞர் அணி தலைவர் அர்விந்த், மஇகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட், லெம்பா பந்தாய் மஇகா தலைவர் கணேஷ், மலூரி டேவிட், செராஸ் நலேந்திரன், செனட்டர் டத்தோ சிவராஜா, டத்தோ குணாளன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அதேபோல், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சுரேஸ், டிஎன்பி சந்திரசேகரன், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ, விலாயா மாநில ஓட்டப்பந்தய சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை சிறப்பு பூஜைகளுக்கு பின், பிற்பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதன் பின் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
