25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

✨“காளி கருப்பு” பாடல் வெளியீட்டு விழா – ஷா ஆலாம் டி.எஸ்.ஆர் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 7
👁 Reading Now : 31

கோலாலம்பூர் – அண்மையில் “காளிகருப்பு” இசை பாடல் வெளியீட்டு விழா டி.எஸ்.ஆர் திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் எம்ஐபிபிபி கட்சியைச் சேர்ந்த புனிதன், கட்சியினரும், பல கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் “காலி கருப்பு” பாடல் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

🎤 இயக்குனர் உமாகாந்தன் பேசுகையில்:
“உழைத்தால் முன்னேறலாம். இரண்டு தெய்வங்களையும் இணைத்து இந்த பாடலை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம். அனைவரையும் கவரும் வகையில் பாடல் அமைந்துள்ளது. இதை யூடியூப் மூலம் பார்வையிடலாம். எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

🎬 தயாரிப்பாளர் டாக்டர் சஸ்வின் தனது உரையில்:
“இது ஒரு சிறந்த சாமி படமாக வரவேண்டும் என்பதே என் ஆசை. அதற்குத் தகுந்தவாறு இயக்குநர் உமாகாந்தன் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். நானும் முதல்முறையாக இதில் நடித்துள்ளேன். பாடல் காட்சி பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. முழு திரைப்படத்தையும் விரைவில் வெளியிட உள்ளோம்,” என்று தெரிவித்தார்.

✨ “காளி கருப்பு” பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles