24.7 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

மீண்டும் பதவிக்கு வர ஆசைப்படுகிறார் துன் மகாதீர்; சட்டமன்ற உறுப்பினர் குண ராஜ் சாடல்!

நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.மீண்டும் நாடாளுமன்ம் கூட்டப்பட வேண்டும் என்பதே பக்காத்தான் ஹரப்பானின் போராட்டமாகும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.
என்ஓசி தேசிய செயல்பாட்டு மன்ற அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
என் ஓ சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் கோரிக்கை விடுத்திருந்தது தேவை இல்லாத ஒன்று.
என்ஓசி மூலம் மீண்டும் பதவிக்கு வர அவர் விருப்பப்படுகிறார் போல் தெரிகிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டை வழி நடத்த வேண்டும் இதுவே எங்களின் போராட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles